ADDED : செப் 06, 2025 01:01 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வளத்தாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாளையம், 29. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர், செப்., 3ம் தேதி காலை, வழக்கம் போல, 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்த போது, ஸ்கூட்டர் திருடு போனது தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் வெண்குடியைச் சேர்ந்த இளையராஜா, 25, முத்துக்குமார், 21 , வாலாஜாபாத்தைச் சேர்ந்த அஜய், 21, ஆகிய மூவரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனத்தை பண்ருட்டி கண்டிகையில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் துாத்துக்குடியைச் சேர்ந்த டாலி, 29, என்பவரிடம் விற்றது தெரிய வந்தது.
பழைய இரும்பு கடை உரிமையாளர் டாலி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.