/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்போன் திருடியதாக நான்கு பேர் கைது
/
செல்போன் திருடியதாக நான்கு பேர் கைது
ADDED : நவ 21, 2024 11:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சவுபாக்கியா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம், 46; அரிசி மண்டி நடத்தி வருகிறார். கடந்த 18 ம் தேதி, கடையில் அமர்ந்து மொபைல் போனை ஜீவரத்தினம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, ஜீவரத்தினத்தை இரும்பு கம்பியால் தாக்கி, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.
இதுசம்பந்தமாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். மொபைல் போனை பறித்ததாக, வாலாஜாபாத்தைச் சேர்ந்த அருண்குமார், 28; சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த கணேஷ், 22; மற்றும் மணிகண்டன், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். இவர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, வெங்கடேசனிடம் இருந்த மொபைல் போனை ஒருவர் திருடியுள்ளார். அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணையில், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியைச் சேர்ந்த நக்கா தருண்குமார், 23, என்பது தெரியவந்தது. இவரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.