/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமண ஆசைக்காட்டி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
/
திருமண ஆசைக்காட்டி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
ADDED : மார் 04, 2024 06:20 AM
வியாசர்பாடி : வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் ஜெனிபர், 33. இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்தார். ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக, 'ஷாதி.காம்' என்ற 'ஆன்லைன்' திருமண தகவல் செயலி வாயிலாக, ஜெனிபர் வரன் தேடியுள்ளார்.
பெங்களூரில் இருந்து மஞ்சுநாத் என்பவர், ஜெனிபரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பிரபல தனியார் வங்கி மேலாளர் என்றும் ஜெனிபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, ஜெனிபரும் அவருடன் பழகி வந்துள்ளார்.
சமீபத்தில், அவசர உதவிக்காக 1 லட்சம் ரூபாய் வேண்டும் என, மஞ்சுநாத் கேட்க, ஜெனிபரும் கொடுத்துள்ளார்.
அதன்பின் பணமும் கிடைக்கவில்லை. ஜெனிபரின் மொபைல் போன் அழைப்புகளும் மஞ்சுநாத் புறக்கணித்துள்ளார். இதனால், அவர் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தார். அந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை என தெரிந்தது.
இதையடுத்து, எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார்.

