sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரத்தில் வரும் 13ல் இலவச கண் மருத்துவ முகாம்

/

காஞ்சிபுரத்தில் வரும் 13ல் இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் 13ல் இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் 13ல் இலவச கண் மருத்துவ முகாம்


ADDED : ஜூலை 05, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரத்தில் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும் 13ம் தேதி, காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.

கண்புரை நோய் உள்ளவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரை, அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், 98423 46046, 94432 69946, 97914 08768 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, லயன்ஸ் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us