/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்
/
சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்
சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்
சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 18, 2025 10:34 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, கருத்தரித்தல் தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது.
சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, சங்கரா க்ருபா எஜுகேஷனல் மற்றும் மெடிக்கல் டிரஸ்ட், சென்னை அனந்தா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில், காஞ்சிபுரம் ஏனாத்துார் சாலை, கோனேரி குப்பத்தில் உள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம், நாளை காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அனந்தலட்சுமி, கருவுறுதல் பற்றிய சிறப்பு ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், ஐ.யு.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., சிகிச்சைக்கான தனிப்பட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. வயதாகிவிட்டது இனி குழந்தை பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.
பெண்களுக்கான ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை, நீர்க்கட்டி, கர்ப்பபை பிரச்னை பற்றியும், மீண்டும் மீண்டும் கருச்சிதைவு பற்றிய மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
குறைந்த கட்டணத்தில் ஆய்வக பரிசோதனையும், 50 சதவீத தள்ளுபடியில் இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்யப்பட உள்ளது. முன்பதிவுக்கு 94450 66397, 044-27264075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.