ADDED : மார் 15, 2024 08:59 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்,:காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு மற்றும் ஒலிமுகமதுபேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
முகாமில், 102 பேர் பங்கேற்றனர். இதில், கண்பார்வை குறைபாடு உள்ள 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, கண்புரை அறுவை சிகிச்சைக்காக எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
