/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சரக்கு ரயில் இன்ஜின் கோளாறு ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
/
சரக்கு ரயில் இன்ஜின் கோளாறு ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
சரக்கு ரயில் இன்ஜின் கோளாறு ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
சரக்கு ரயில் இன்ஜின் கோளாறு ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
ADDED : நவ 23, 2024 12:37 AM

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், வாலாஜாபாத் கார் ஏற்றுமதி முனையம் இயங்கி வருகிறது. இந்த ஏற்றுமதி முனையத்தில், கார்களை ஏற்றிக் கொண்டு, நேற்று காலை 10:30 மணிக்கு அரக்கோணம் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் அருகே சென்ற போது, ரயில் இன்ஜின் மற்றும் இணைப்பு பெட்டிகளில் புகை வருவதாக, ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயிலை நிறுத்திய ஓட்டுனர், இன்ஜின் மற்றும் இணைப்பு பெட்டிகளை ஆய்வு செய்தார். பின், உராய்வு காரணமாக புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோளாறு 45 நிமிடங்களுக்கு பின் சரிசெய்யப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சென்னையில் இருந்து திருமால்பூர் வரையில் இயக்கப்பட்ட மின்சார ரயில், வாலாஜாபாதில் நிறுத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் புறப்பட்டு சென்ற பின், மின்சார ரயில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டது.
இதனால், செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.