/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி மன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு
/
ஊராட்சி மன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : ஏப் 22, 2025 11:31 PM
உத்திரமேரூர்:அம்மையப்பநல்லுார் ஊராட்சியில், மகளிர் சேவை மையம் அருகே, ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.
கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் கட்டட கூரையில் இருந்து மழைநீர் வழிந்து ஆவணங்கள் சேதமடைந்து வருகின்றன.
புதிய கட்டடம் கட்ட அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட, 2025 --- 26ம் நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டட பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.