/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காடுகாளியம்மன் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
/
காடுகாளியம்மன் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
காடுகாளியம்மன் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
காடுகாளியம்மன் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : மார் 07, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் முதலியார் தெருவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் காடுகாளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் மூலவர் கோபுரம் உட்பட, கோவிலின் பிற பகுதிகளும் சீரமைத்து திருப்பணி செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், திருப்பணி மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறை, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பணி செய்வதற்கான பாலாலயம் இன்று நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்தபதி ஆய்வு செய்த பின், திருப்பணிகள் நடைபெற உள்ளன.