/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடிப்படை வசதிகளுக்காக வாலாஜாபாதில் நிதி ஒதுக்கீடு
/
அடிப்படை வசதிகளுக்காக வாலாஜாபாதில் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 14, 2025 09:22 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்தும், சில இடங்களில் மண் பாதை கொண்டதாகவும் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், 6வது வார்டு சேர்க்காடு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் 11வது வார்டில் உள்ள ஆறுமுகப்பேட்டை, கோவிந்த பிள்ளைத் தெரு, பி.கே.செட்டித்தெரு போன்ற இடங்களில், கான்கிரீட் சாலை அமைக்க பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று, 1வது வார்டில் வடக்கு தெரு, கிழக்கு தெரு, வடக்கு குறுக்கு தெரு, அம்பேத்கர் நகர், சிவன்படை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டு, வாலாஜாபாத் பேரூராட்சி 2025 - 26ம் ஆண்டு பொது நிதியின்கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.