/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு நிதி ஒதுக்கீடு
/
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 05, 2024 02:12 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிழற்குடை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை உள்ளிட்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 2024- - 25ம் நிதியாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 16வது வார்டில் உள்ள ஓ.பி.குளம் புதுத்தெருவில், புதிதாக அங்கன்வாடி மையம், 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது.
மேலும், 28வது வார்டுக்குட்பட்ட மிலிட்டரி ரோடு, அண்ணா நகரில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டும் பணிகளும் துவங்க உள்ளன. இதற்கான 'டெண்டர்' பணிகள் முடிந்தபின், கட்டுமானப் பணிகள் துவங்க உள்ளன.