ADDED : செப் 24, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்: வாலாஜாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனுர் கிராமத்தில், சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சீட்டு ஆடி கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், அய்யம்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

