/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அல்லாபாத் ஏரிக்கரையில் குப்பை குவியல்
/
அல்லாபாத் ஏரிக்கரையில் குப்பை குவியல்
ADDED : ஜன 17, 2024 10:20 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேட்டில் இருந்து, சி.வி.ராஜகோபால் தெருவிற்கு செல்லும் சாலையோரம், அல்லாபாத் ஏரி உள்ளது.
ஏரியை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள், ஏரிக்கரையை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏரிக்கரை குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
நாள் கணக்கில் தேங்கியுள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரி நீரும் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, அல்லாபாத் ஏரிக்கரையில் உள்ள குப்பையை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.