/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை தேக்கம் ஏகனாம்பேட்டையில் சீர்கேடு
/
சாலையோரம் குப்பை தேக்கம் ஏகனாம்பேட்டையில் சீர்கேடு
சாலையோரம் குப்பை தேக்கம் ஏகனாம்பேட்டையில் சீர்கேடு
சாலையோரம் குப்பை தேக்கம் ஏகனாம்பேட்டையில் சீர்கேடு
ADDED : டிச 21, 2024 12:31 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், கருக்குப்பேட்டையில் இருந்து ஏகனாம்பேட்டைக்கு செல்லும் சாலை உள்ளது. ஏகனாம்பேட்டை மற்றும் வில்லிவலம், பெண்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலைக்கு செல்ல. இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஏகனாம்பேட்டையில் இயங்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, இச்சாலை வழியாக ஏராளமான மாணவியர் சென்று வருகின்றனர். இப்பள்ளி அருகே ஊராட்சி பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நுாலகம் போன்றவை உள்ளன.
இச்சாலையோரங்களிலும், பள்ளி அருகேயுள்ள பொது இடங்களிலும் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, சாலையோர குப்பை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.