ADDED : நவ 10, 2024 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் காஞ்சி நகர மாத்ரு சக்தி சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், கடம்பர் கோவில் மற்றும் மாகரல் அடுத்த அரசாணிபாளையம் கிராமத்தில், கோபாஷ்டமியையொட்டி நேற்று கோபூஜை நடந்தது.
இதில், 30 பசுக்களுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இடப்பட்டு, கோ பூஜை மந்திரங்கள் ஓதப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அட்சதை துாவப்பட்டது.
இதில், கடம்பர் கோவில், ஆதவபாக்கம், வெங்கச்சேரி, அரசாணிபபாளையம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பசுக்களை தொட்டு வணங்கினர்.