/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பஸ் ஓட்டுநர் கைது
/
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பஸ் ஓட்டுநர் கைது
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பஸ் ஓட்டுநர் கைது
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பஸ் ஓட்டுநர் கைது
ADDED : அக் 26, 2025 11:02 PM

உத்திரமேரூர்: மன்னன்குடிசை கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மன்னன்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 40.
உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று முன் தினம், அதிகாலை 4:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தனியாக படுத்து உறங்கி கொண்டிருந்த, 45 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பெண்ணின் உறவினர்கள் சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசீல் புகார் அளித்தனர்.
இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார், பால கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.