/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்
/
உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்
உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்
உள்ளாவூர் - செங்கல்பட்டு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்
ADDED : நவ 24, 2024 07:40 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூரில் இருந்து, பாலுார் வழியாக, செங்கல்பட்டுக்கு, தடம் எண்;டி22ஏ, அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
உள்ளாவூர் சுற்றுவட்டார பகுதியினர், இப்பேருந்து சேவையை பயன்படுத்தி செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கடைத்தெரு மற்றும் கல்வி கூடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், இப்பேருந்து சேவை, மூன்று ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியினர், உள்ளாவூரில் இருந்து, 3 கி.மீ., துாரத்திலான காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலையில் உள்ள, உள்ளாவூர் கேட் வரை நடந்து வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, வாலாஜாபாத், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இதனால், முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவிர் உள்ளிட்ட பலர் அவதிபட்டு வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியினரின் தொடர் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை வாயிலாக நிறுத்தம் செய்த பேருந்து சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது.