/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு கல்லூரி மைதானம் செடிகள் வளர்ந்து பாழ்
/
அரசு கல்லூரி மைதானம் செடிகள் வளர்ந்து பாழ்
ADDED : ஜன 20, 2025 01:33 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் பகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதன் வாயிலாக, மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்பட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று வந்தனர்.
தற்போது, விளையாட்டு மைதானம் முறையாக பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால், வெளியூர்களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க போதிய பயிற்சி எடுக்க முடியாத நிலையும் உள்ளது.
எனவே, செடி, கொடிகள் வளர்ந்துள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுகுமாரன் கூறியதாவது:
கல்லூரி விளையாட்டு மைதானத்தில், அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றை விரைவில் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.