/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆட்சிமொழி சட்ட வார நிகழ்வுகள் துவக்கம்
/
ஆட்சிமொழி சட்ட வார நிகழ்வுகள் துவக்கம்
ADDED : டிச 18, 2024 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான ஆட்சிமொழி சட்ட வாரம், டிச., 18 முதல் 27ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின் காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.