/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிப்பு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிப்பு
ADDED : பிப் 09, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்':குன்றத்துார் ஒன்றியம் படப்பை ஊராட்சி, ஆதனஞ்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.
இதில், கராத்தே, யோகா, நடனம் உள்ளிட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட குழு தலைவர் மனோகரன் பங்கேற்று, ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், 40 பேருக்கு பட்டம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.