/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.2 கோடி உதவித்தொகை வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.2 கோடி உதவித்தொகை வழங்கல்
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.2 கோடி உதவித்தொகை வழங்கல்
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.2 கோடி உதவித்தொகை வழங்கல்
ADDED : டிச 30, 2025 04:40 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் சார்பில், 1.97 கோடி ரூபாய், உதவித்தொகை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பெருநிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இடையே திட்டமிட்ட, வெளிப்படையான கூட்டாண்மைகளை உருவாக்குவதில் திட்டத்தின் பங்கு இருப்பது பற்றி பேசினர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதின் அவசியத்தை வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் வழங்கும் பங்களிப்பை பாராட்டியதுடன், தகுதியான பயனாளர்களை முறையான கட்டமைப்பின் மூலம் சென்றடையச் செய்வதில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தையும் பற்றியும் பேசினர்.
இந்நிகழ்ச்சியில், அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான 1.97 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களின் கல்வி பயண அனுபவங்களைப் பகிர்ந்து, இத்தகைய நேரத்திற்கேற்ற நிதி உதவி, உயர்கல்வி கனவுகளை வலுப்படுத்துவதிலும், தன்னம்பிக்கை மற்றும் கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மொபிஸ் இந்தியா துணை பொது மேலாளர் ஹூ மின் ஹோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாநில ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

