/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 14, 2025 11:56 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை- 9ம் தேதி கிராம தேவதை ஏகாத்தம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும் அம்மன் வீதியுலா வந்தது.
ஜூலை-10ம் தேதி முதல் நாள், காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி பூஜை நடந்தது.
நேற்று, காலை 9:45 மணி அளவில் கலசப் புறப்பாடு நடந்தது. காலை, 10:10 மணி அளவில் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீரை உற்றி, சிவச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.
அதை தொடர்ந்து, பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவர்களுக்கு மஹா அபிஷேகம் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவ வைபவம் மற்றும் இரவு, 7:00 மணி அளவில் வீதியுலா நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோரை, தட்சிணாமூர்த்தி கோவில் நிர்வாகம் சார்பில், அதன்செயல் அலுவலர் கதிரவன் வரவேற்றார்.
வாலாஜாபாத் தி.மு.க.,- வடக்கு ஒன்றிய செயலர் பாபு, வர்த்தக அணி அமைப்பாளர் தீபம் சுரேஷ், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் லோகுதாஸ், சுனிதா, கோவிந்தவாடி ஊராட்சி தலைவர் சரிதா, துணை தலைவர் ராஜராஜேஸ்வரி, 8வது வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, முன்னாள் அறங்காவலர் ஆர்.கே.சசிகுமார், வாலாஜாபாத் ஒன்றிய பா.ம.க., தேர்தல் பணிக்குழு துணை தலைவர் செல்வம்.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார ஒருங்கிணைந்த அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் பரசுராமன், பொருளாளர் பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.