/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்ணீர் பந்தல் அமைத்த அரசு இடம் ஆட்டை
/
தண்ணீர் பந்தல் அமைத்த அரசு இடம் ஆட்டை
ADDED : நவ 07, 2024 12:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில், நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான சாலையோர கடைகள் முளைத்துள்ளன. காய்கறி கடைகள், பழக்கடை, டிபன் கடை என சாலையை ஆக்கிரமித்து முளைத்துள்ளன.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே அரசியல் கட்சியினர் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அமைத்த தண்ணீர் பந்தலை பெரிதாக மாற்றி அப்பகுதியை ஆக்கிரமித்து, டிபன் கடையாக சிலர் நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே, கோடை காலத்தில் அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். அந்த வகையில், கடந்தாண்டு தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு அ.தி.மு.க.,வினர் அதே இடத்தில் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர்.
அந்த இடத்தில், தண்ணீர் கேன்கள் அகற்றப்பட்டு, உள்ளே தள்ளுவண்டி கடை அமைத்து, டிபன் கடை நடத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இப்பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடமாகும்.
அருகில் பேருந்து நிறுத்தமும் இருப்பதால், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகி வருகின்றன.
எனவே, கலெக்டர் அலுவலகம் சுற்றி தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.