ADDED : ஜன 11, 2025 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 கிராம ஊராட்சிகளிலும், வரும் 26ல் குடியரசு தினத்தில், காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை, ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக விளம்பர பதாகை வாயிலாக வரவு - செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.