/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு
/
கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு
ADDED : நவ 13, 2024 07:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஊராட்சிகள் தினமான கடந்த நவ.,1ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் அன்றைக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்களை கெளரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், 'ஜல்ஜீவன்' இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் போன்றவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

