/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வழித்தடத்தில் புல் அகற்றும் பணி
/
ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வழித்தடத்தில் புல் அகற்றும் பணி
ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வழித்தடத்தில் புல் அகற்றும் பணி
ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வழித்தடத்தில் புல் அகற்றும் பணி
ADDED : பிப் 05, 2024 05:51 AM

காஞ்சிபுரம் : அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், திருமால்பூர் - சென்னை கடற்கரை, அரக்கோணம் - செங்கல்பட்டு வழியாக, சென்னை கடற்கரை வரை மின்சார ரயில்கள் மற்றும் மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில்கள் என, பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் வழித்தடத்தின் இருபுறமும், சீமைக் கருவேல மரங்கள், ஆளுயர புல் புதர் மண்டிக்கிடக்கின்றன. இதனால், ஆடு, மாடுகள் தண்டவாளத்தை கடந்து சென்றால், ரயில் ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, நேற்று, ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் புல்லை இயந்திரத்தின் மூலமாக அகற்றும் பணியை துவங்கியுள்ளனர். தற்போது, காஞ்சிபுரத்தில் இருந்து, பெரியகரும்பூர் கிராமம் வரையில், தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் புல்லை, அகற்றி உள்ளனர்.
ரயில் இருப்பு பாதை ஓரம் இருக்கும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவில்லை என, சமூக ஆர்வலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

