/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பென்னலுாரில் கிராவல் மண் திருட்டு
/
பென்னலுாரில் கிராவல் மண் திருட்டு
ADDED : பிப் 13, 2024 04:22 AM

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பென்னலுார் ஊராட்சியில், 2,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அரசுக்குச் சொந்தமான, 10 ஏக்கர் பரப்பளவு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் இருந்து, மர்ம நபர்கள் 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, இரவு நேரங்களில் கிராவல் மண் அள்ளுகின்றனர். 6 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி, லாரிகள் வாயிலாக கொண்டு சென்று, தனியார் ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு, ஆங்காங்கே பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.