ADDED : பிப் 09, 2026 05:07 AM

காஞ்சிபுரம்: சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் பசுமை வலை அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, கவுரியம்மன்பேட்டை, மருதம் ஆகிய கிராமங்களின் வழியாக, தென்னேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
மேலும், சிட்டியம்பாக்கம் நான்குவழி கூட்டு சாலையில் இருந்து, கரூர் கிராமம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இச்சாலையோரம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆளுயரத்திற்கு மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அந்த மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் விதமாக, பசுமை வலை அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதன் மூலமாக, சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் ஆடு, மாடுகளால் சேதம் ஏற்படாமல் இருக்கும் என, நெடுஞ் சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
