/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி தலைவருக்கு பசுமை போராளி விருது
/
ஊராட்சி தலைவருக்கு பசுமை போராளி விருது
ADDED : ஜூன் 11, 2025 01:09 AM

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், 2022ம் ஆண்டு முதல் பல்வேறு சமூக நல அமைப்புடன் இணைந்து, 15 ஏக்கரில், 16,000 மரக்கன்றுகள் மற்றும் 20,000 பனை விதைகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மரமும், 15 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன.
இதை பாராட்டி, சங்கல்பதாரு நிறுவனம் தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் என்பவருக்கு, ‛பசுமை போராளி' விருது வழங்கி கவுரவவித்துள்ளது.
இதுகுறித்து, பசுமை போராளி விருது பெற்ற தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
குவாரிகளால் பாதிக்கப்பட்ட நிலத்தில் ஏதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. இதை வளப்படுத்த வேண்டும் நினைத்து, சங்கல்பதாரு, எல்.அன்ட்.டி., இந்தியா என்.ஜி.ஓ., ஆப்டிவ் நிறுவனம், அரசு, குடியிருப்புவாசிகள் ஆகியோர் உதவியுடன் குறுங்காடு, காய்கறி தோட்டம் அமைத்தும் பராமரித்து வருகிறோம்.
ஊராட்சி நிர்வாகிகள், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் குறுங்காடு உருவாக்கி உள்ளோம். இங்கு, சப்போட்டா, மா, கொய்யா உள்ளிட்ட பழ மரங்கள். காய்கறி செடிகள் நட்டு வளமைப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.