/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டம் காஞ்சியில் நடக்காது மாவட்ட அமைச்சர் மாறியதால் முடிவு

ADDED : அக் 25, 2024 07:28 PM
காஞ்சிபுரம்:தி.மு.க., அரசு கடந்த 2021ல் பொறுப்பேற்றது முதல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து அமைச்சர் அன்பரசன் பொறுப்பு வகித்து வந்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலரான இவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் பற்றி, அடிக்கடி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுதும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், 13 பேர் மாற்றப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அமைச்சர் அன்பரசன், மாதம் இருமுறை குறைதீர் கூட்டம் நடத்தி வந்தார். இக்கூட்டம் இனி நடக்காது என, அதிகாரிகள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், இரு நாட்கள் முன் அமைச்சர் அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்துள்ளது. ஆனால், காஞ்சிபுரத்தில் இக்கூட்டம் நடத்துவது தொடர்பாக, அதிகாரிகளுக்கு அமைச்சரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்கின்றனர்.
இதனால், அடுத்து வரும் நாட்களில் இக்கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.