/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 17, 2025 12:15 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 510 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று நடந்தது. இதில், பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, பட்டா திருத்தம், கல்குவாரி பிரச்னைகள் என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 510 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கூட்டரங்கு வெளியே, வீரசிவாஜி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர், பொதுச் செயலர் பலராமன் தலைமையில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் நெய்வது; மோசடி செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை கேட்பது; நடவடிக்கை எடுக்காத கைத்தறித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.
போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சு நடத்தி, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டரிடம் தங்களது பிரச்னைகளை நெசவாளர்கள் தெரிவித்து மனு அளித்தனர்.