/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரூப் -- 2 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
/
குரூப் -- 2 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : செப் 26, 2024 07:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு, ஒரு வாரத்திற்கு முன், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தன.
இதேபோல, விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப் - 2, குரூப் - 2ஏ முதன்மை தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள, 11,588 பணியிடங்களுக்கான தேர்வுக்கும், செப்., 30ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள தேர்வர்கள், புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், ஆதார் அட்டை ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, 044- 27237124 / -27238894 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.