/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் விழா
/
அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் விழா
ADDED : ஜூன் 08, 2025 08:47 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் நாகத்தம்மன் கோவிலில், நடப்பாண்டு வைகாசி திருவிழா, கடந்த 6ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கங்கையில் இருந்து அம்மன் திரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து குடம் அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மனை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதையடுத்து, மதியம் 2:00 மணிக்கு நாகத்தம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.
சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில், நடப்பாண்டிற்கான கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது.
இதில், நேற்று காலை, கங்கை அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. இரவு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.