/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
/
நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
ADDED : ஆக 25, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், கோகுலம் தெருவில் உள்ள நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் வீதியில் ஆனந்த விநாயகர், நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு விநாயகருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலை 6:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகம்மன் வீதியுலா வந்தார். இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.