/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டுதல் முக்கியம்: கலெக்டர்
/
மாணவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டுதல் முக்கியம்: கலெக்டர்
மாணவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டுதல் முக்கியம்: கலெக்டர்
மாணவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டுதல் முக்கியம்: கலெக்டர்
ADDED : செப் 25, 2024 07:09 PM
காஞ்சிபுரம்:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்விக்கு தேர்வு செய்ய உள்ள பாடப்பிரிவுகள், திறன் படிப்புகள், வேலைவாய்ப்புகள் போன்ற விபரங்களை அளிக்கும், 'நான் முதல்வன்' திட்டத்தின கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சி, கடந்த மே மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு படிக்காத அல்லது இடைநின்ற மாணவர்களுக்காக, உயர்வுக்கு படி நிகழ்ச்சி, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், உயர்கல்வி படிப்புகளும், டிப்ளமோ, ஐடிஐ, கலை, அறிவியல் பட்டபடிப்புகள், பொறியியல் படிப்புகள் பற்றி கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு எடுத்து கூறினர். இதில், ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர்வுக்கு படி நிகழ்ச்சி ஏற்கனவே கீழம்பி, மேவளூர்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள கல்லுாரிகளில் நடத்தப்பட்டன.
அங்கு பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியருக்கு திறன் மேம்பாட்டு கழகத்தினரால், உயர்கல்வி பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதுபோல, உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி கல்வி அதிகாரிகள், திறன் மேம்பாட்டு கழகத்தினர் தெரிவிக்கும் ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெற்று வாழ்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

