ADDED : ஆக 15, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவரை, கஞ்சா விற்பனை வழக்கில், பொன்னேரிக்கரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது மேலும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை தொடர்ந்து, கலெக்டர் கலைச்செல்வி, மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் உள்ள மணிகண்டனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.