/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்த நிலை கிணற்றை மூட குண்டுபெரும்பேடு மக்கள் கோரிக்கை
/
திறந்த நிலை கிணற்றை மூட குண்டுபெரும்பேடு மக்கள் கோரிக்கை
திறந்த நிலை கிணற்றை மூட குண்டுபெரும்பேடு மக்கள் கோரிக்கை
திறந்த நிலை கிணற்றை மூட குண்டுபெரும்பேடு மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 26, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் குண்டுபெரும்பேடு ஊராட்சி உள்ளது. குண்டு பெரும்பேடு ஊராட்சி அலுவலகம் அருகே, செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அங்கன்வாடி மையம் எதிரே, பாழடைந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால், அங்கன் வாடிக்கு செல்லும் குழந்தைகள், எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம்திறந்த நிலையில் உள்ள பாழடைந்த கிணற்றின் மீது, இரும்பு வலை கொண்டு மூடி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.