/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குட்கா விற்றவர் கைது 26 கிலோ பறிமுதல்
/
குட்கா விற்றவர் கைது 26 கிலோ பறிமுதல்
ADDED : டிச 17, 2024 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுார் கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், மண்ணுார் அம்பேத்கர் தெருவில் உள்ள பெட்டி கடையில், ஹான்ஸ், கூலீப், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள, 26 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் முனுசாமி, 44, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.