/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியாம்பூண்டி கடையில் குட்கா விற்றவர் கைது
/
களியாம்பூண்டி கடையில் குட்கா விற்றவர் கைது
ADDED : ஜூலை 08, 2025 10:31 PM
உத்திரமேரூர்:களியாம்பூண்டியில் பெட்டிக்கடையில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 3.2 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, களியாம்பூண்டி பகுதியில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று, காலை 10:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள வீரச்செல்வன், 51, என்பவரின் பெட்டிக்கடையில் சந்தேகத்தின்படி, சோதனையிட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 3.2 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வீரச்செல்வனையும் பிடித்து பெருநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து,கைது செய்து விசாரிக்கின்றனர்.

