/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொபெட்டில் குட்கா விற்றவர் கைது
/
மொபெட்டில் குட்கா விற்றவர் கைது
UPDATED : ஆக 11, 2025 11:38 AM
ADDED : ஆக 11, 2025 12:33 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், மொபெட்டில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் குட்கா பொருட்கள் சப்ளை செய்வதாக, ஸ்ரீபெரும்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் குளம் அருகே, போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 'டிவிஎஸ். - எக்ஸ்.எல்.,' மொபெட்டில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஹரி, 42, என்பவரை கைது விசாரித்ததில், மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு விற்று வந்தது தெரிந்தது.
அவரிடமிந்து, 10 கிலோ குட்கா, 2.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபெட் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.