ADDED : ஜூன் 10, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, நெமிலி பகுதியில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நெமிலி சாலையில் உள்ள பெட்டி கடையில், போலீசார் நேற்று, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 12,000 ரூபாய் மதிப்புள்ள, 3.5 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இப்ராகிம் குட்டி, 53, என்பவரை கைது செய்தனர்.