ADDED : ஜன 08, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கண்ணன்தாங்கல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஸ்ரீபெரும்புதுார் தனிப்படை எஸ்.ஐ., சரவணன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில், குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலாஜி, 27, என்பவரை, கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.