/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அண்ணா பூங்காவில் ரூ.25 லட்சத்தில் மகளிருக்கான 'ஜிம்'
/
அண்ணா பூங்காவில் ரூ.25 லட்சத்தில் மகளிருக்கான 'ஜிம்'
அண்ணா பூங்காவில் ரூ.25 லட்சத்தில் மகளிருக்கான 'ஜிம்'
அண்ணா பூங்காவில் ரூ.25 லட்சத்தில் மகளிருக்கான 'ஜிம்'
ADDED : செப் 07, 2025 10:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணா நுாற்றாண்டு பூங்காவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களுக்கான 'ஜிம்' கட்டுவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
காஞ் சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில், ஆண்களுக்கான ஜிம் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அடுத்தகட்டமாக, அதே பூங்காவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம் .எல்.ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியில், மகளிருக்கான ஜிம் கட்டப்பட உள்ளது.
மாநகராட்சி பட்ஜெட்டில், மேயர் மகாலட்சுமி, கடந்த மார்ச் மாதம் தன் அறிக்கையில் மகளிருக்கான ஜிம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜிம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான டெண்டரை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.