/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதியில் விடப்பட்ட நிழற்குடை பணி வல்லக்கோட்டை பயணியர் அவதி
/
பாதியில் விடப்பட்ட நிழற்குடை பணி வல்லக்கோட்டை பயணியர் அவதி
பாதியில் விடப்பட்ட நிழற்குடை பணி வல்லக்கோட்டை பயணியர் அவதி
பாதியில் விடப்பட்ட நிழற்குடை பணி வல்லக்கோட்டை பயணியர் அவதி
ADDED : ஜூன் 25, 2025 01:47 AM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டையில் பாதியில் விடப்பட்ட நிழற்குடை அமைக்கும் பணியால் பயணியர் அவதி அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது.
கோரிக்கை
இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
இந்த நிலையில், வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை வசதி இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயில், மழையில் பேருந்திற்காக சாலையோரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அவதி அடைந்து வந்தனர்.
இதனால், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பக்தர்கள், பயணியர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி கடந்த ஜன., மாதம் துவங்கியது.
நடவடிக்கை
இந்த நிலையில், ஆறு மாதங்களை கடந்த நிலையில், பயணியர் நிழற்குடை பணிகள் முழுமை பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. நிழற்குடை கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள், அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளது.
இதனால், பயணியர் நிழற்குடைக்கு வரும், பயணியர் சிரமம் அடைந்து வருகின்றனர். நிழற்குடை பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.