ADDED : ஏப் 05, 2026 09:59 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு சுசீலா சாலையில், பாதியில் விடப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் ் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு சுசீலா சாலையோரம் மழை நீர் வெளியேறும் வகையில் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் அடிக்கடி செடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் மாறிவிடுகிறது. இதனால், கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரு ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் முழு நீளத்திற்கும் அமைக்காமல் பாதியில் விடப்பட்டுள்ளது.
எனவே, பாதியில் விடப்பட்டுள்ள கான்கிரீட் கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
