/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (03.10.2024) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (03.10.2024) காஞ்சிபுரம்
ADDED : அக் 03, 2024 12:50 AM
ஆன்மிகம்
மஹோத்ஸவம்
தங்கப்பல்லக்கு, 756வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம், ஸ்ரீகோசம் ஞானமுத்திரை, துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி; சப்பரம், இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா
தேவி நவராத்திரி மஹோத்ஸவம், விசேஷ அலங்காரம், நவாவர்ணபூஜை, கன்யா பூஜை மற்றும் ஸுவாஸினி பூஜை, ரக்க்ஷாபந்தனம், யாகசாலை ஆரம்பம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சூரசம்ஹாரம், மாலை 6:00 மணி. பாலாசாய் புல்லாங்குழல், ராகவேந்திர ராவ் வயலின், சிவராமகிருஷ்ணன் சிதார், போர்ர ஸ்ரீராம் மிருதங்கம், கணேஷ் ராவ் தபேலா, இரவு 7:30 மணி.
பாரம்பரிய புராதன பொம்மலாட்ட நிகழ்ச்சி, தலைப்பு: ஓம் நமோ நாராயண மந்திர மகிமை, நிகழ்த்துவோர்: கும்ப கோணம் ஸ்ரீமுருகன் சங்கீத பொம்மலாட்ட குழுவினர், பெரியவர்களின் முகாம், சங்கரா செவிலியர் கல்லுாரி, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
கரகாட்ட நாயகி அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
தங்கத்தாரணி அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
ஸ்வர்ண காமாக்ஷி அலங்காரம், தங்க கவசம், 108 தேவிகள் அலங்காரம், 108 சக்திபீட கோவில், மங்களபுரி க்ஷேத்ரம், கண்ணந்தாங்கல், மாலை 6:00 மணி; குரோம்பேட்டை சகோதரிகள் கிருத்திகா, புவனேஸ்வரியின் கர்நாடக வாய்பாட்டுகச்சேரி, இரவு 7:00 மணி.
பரந்தாமனின் தங்கையாய் விளங்கும் பவானி அம்மனுக்கு ராஜகுபேரர் அலங் காரம், ராஜகணபதி, பவானி அம்மன்,பாலமுருகன் கோவில், திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
சிறப்பு அலங்காரம், வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
பாலாபிஷேகம்
தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.
குருவார சிறப்பு அபிஷேகம்
சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 5:45 மணி.
குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகியமணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
பொது
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி; மாலை 5:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.
கலச ஸ்தாபனம், நாதஸ்வர இன்னிசை, காலை 6:30 மணி; வயலின் இசை, மாலை 5:00 மணி. பாலா அலங்காரம்: மச்ச அவதாரம், ஸ்ரீபாலா பீடம், நெமிலி, மாலை 6:00 மணி