/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு
/
கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு
ADDED : ஜன 31, 2024 09:53 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார், காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம், பீபாதரன்மண்டல், 40, என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள கம்பெனியில் சாப்பாடு இறக்கிவிட்டு, கம்பெனி வெளியே மொபைல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தில் வந்து, பீபாதரன்மண்டலை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, மொபைல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, செரப்பணஞ்சேரி அருகேயுள்ள நாவலுார் கிராமத்தில் வசிப்பவர் மனோஜ், 17. ஒரகடம் அருகேயுள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், இயற்கை உபாதை கழிக்க, அங்குள்ள சுற்றுச்சுவரில் மொபைல்போனை வைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர்கள் அவரது மொபைல்போனை எடுத்து சென்றதாக, ஒரகடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.