/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவருக்கு கை விலங்கிட்ட தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
/
மாணவருக்கு கை விலங்கிட்ட தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 12, 2024 10:39 PM

பெரம்பூர்:வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அருண்குமார், 24; அம்பேத்கர்அரசு கலைக் கல்லுாரியில் 2ம் ஆண்டு மாணவர். பகுதி நேரமாக, ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த 11ம் தேதி, சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அகரம் செல்லும் பயணியை, தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்தார்.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அருண்குமார் ஓட்டிச்சென்ற ஆட்டோ, அதன் மீது மோதியது. ஆட்டோவின் கண்ணாடி உடைந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அங்கு போலீஸ் சீருடை அணியாமல் வந்த செம்பியம் காவல் நிலைய தலைமை காவலரான அண்ணாமலை, முறையாக விசாரிக்காமல் அருண்குமாரை கன்னத்திலேயே அறைந்தார்.
மேலும், மாணவரான அருண்குமார் கையில் விலங்கிட்டு, போலீஸ் வாகனத்தை வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த அருண்குமாரின் நண்பர்கள், உதவி கமிஷனரிடம் புகார் அளித்தனர். அவர் உரிய விசாரணை நடத்தி, தலைமை காவலர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து, வடக்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு, நேற்று மாற்றப்பட்டார்.

