/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு
/
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு
ADDED : அக் 23, 2024 11:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை சார்பில், கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் திருமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழுநோய், புற்றுநோய், காசநோய், ரேபிஸ், வாய் சுகாதாரம் குறித்து மாணவ- - மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், சுகாதாரத் துறையின் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஜெய்சுந்தர், நல கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், புகையிலை ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம், காசநோய் நல கல்வியாளர் பாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சவரிமுத்து ஆகியோர் தொழுநோய், புற்றுநோய், காசநோய், ரேபிஸ் நோய் குறித்தும் வாய் சுகாதாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
நிறைவாக மாணவ- - மாணவியர், புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் குறைபாடுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.