/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம் விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் பீதி
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம் விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் பீதி
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம் விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் பீதி
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம் விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் பீதி
ADDED : நவ 25, 2024 01:28 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த,ஆரம்ப சுகாதார நிலையத்தை பெருநகர், மேனலூர், அரசாணிமங்கலம், கலியாம்பூண்டி, இளநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, கர்ப்பிணியர் பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் சுகாதார நிலையத்தில், பாதியளவு மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கே, சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே வருகின்றன.
இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள், அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், நுழைவாயில் கேட் இல்லாமலும் உள்ளது.
எனவே, சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுப்பணித் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறும்.
மேலும், நுழைவாயில் கேட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.